துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கும் படம், ‘சோலோ’. மலையாளம், தமிழில் உருவாகும் இந்தப் படத்தை பிஜாய் நம்பியார் இயக்குகிறார். இவர், விக்ரம், ஜீவா நடித்த ’டேவிட்’ என்ற படத்தை இயக்கியவர். இந்தி நடிகர் தினோ மோரியா, இந்தி நடிகை நேகா சர்மா, தன்ஷிகா, ஸ்ருதி ஹரிஹரன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இதில் நேகா சர்மா தமிழ்ப் பெண்ணாக நடிக்கிறார்.
‘இதில் நான் தமிழ்ப் பெண்ணாகத்தான் நடிக்கிறேன். தமிழில் பேசி நடிக்க சிரமமாக இருக்கிறது. இருந்தாலும் அதற்காகப் பயிற்சி எடுத்து வருகிறேன். எனது பேவரைட் இயக்குனர் ஒருவர் இதற்கு உதவுகிறார். என் தமிழ் இனி சரியாக இருக்கும் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார் நேகா சர்மா.