சினிமா

யாருங்க இதைக் கிளப்பிவிட்டது? நடிகை பாய்ச்சல்

யாருங்க இதைக் கிளப்பிவிட்டது? நடிகை பாய்ச்சல்

Rasus

படம் இயக்கப் போவதாக வந்த தகவலை மறுத்துள்ளார் நடிகை நித்யா மேனன்.

தமிழில், 180, வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, ஓகே கண்மணி, இருமுகன் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். இப்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் தெலுங்கு படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் விரைவில் அதை தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதுபற்றி அவரது மானேஜரிடம் கேட்டபோது, ’அவர் படம் எதையும் இயக்கவில்லை. இப்போது நடிப்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறார். அவர் படம் இயக்குவதாக வரும் தகவல்கள் வதந்திதான்’ என்றார்.