விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன.
’நானும் ரெளடிதான்’ வெற்றிக்குப்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மீண்டும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் இணைந்துள்ளனர். மற்றொரு நாயகியாக சமந்தா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் இரண்டுப் பாடல்களும் வெளியாகி கவனம் ஈர்த்தன. அனிருத் இசையமைத்துள்ளார்.
நயன்தாரா கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நயன்தாரா இப்படத்திற்காக டப்பிங் பேசியுள்ளார். இதனை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய டயலாக்ஸை நீயே டப் பண்றது மிகுந்த சந்தோஷம்” என்று உற்சாகமுடன் தெரிவித்துள்ளார்.