சினிமா

’96’ கார்த்திக் நேத்தா வரிகளில் நாளை வெளியாகும் நயன்தாராவின் ’நெற்றிக்கண்’ பாடல்

’96’ கார்த்திக் நேத்தா வரிகளில் நாளை வெளியாகும் நயன்தாராவின் ’நெற்றிக்கண்’ பாடல்

sharpana

நயன்தாரா பார்வையற்றவராக நடித்துள்ள ’நெற்றிக்கண்’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘அவள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மிலிந்த் ராவ் நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கி வருகிறார். விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இப்படத்தில் பார்வையற்றப் பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா, பார்வையில்லையென்றாலும் தனது அறிவாற்றலால் கொடூரமான சீரியல் கில்லரை எப்படி கண்டுப் பிடிக்கிறார் என்பதே கதைக்களம் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘இதுவும் கடந்து போகும்’ பாடல் வெளியாகும் என்று அறிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து விரைவில்… விரைவில் என்று அப்டேட் கொடுத்துக்கொண்டே வந்தார்கள். ஒருவழியாக இன்றுதான், ‘இதுவும் கடந்துபோகும்’ பாடல் நாளை 9 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள்.

க்ரிஷ் இசையில் ‘96’ படப்புகழ் கார்த்திக் நேத்தா இப்பாடலை எழுதியிருக்கிறார் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே, கார்த்திக் நேத்தா வரிகளில் ‘வாகை சூடவா’ படத்தின் ‘போறானே.. போறானே’, ’திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தில் ‘என்தாரா என்தாரா நீயே என் தாரா’, 'நெடுஞ்சாலை' படத்தில் ‘தாமிரபரணியில் நீந்தி வந்த’ பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்ததோடு இப்போதும் பலரின் ஃபேவரைட் லிஸ்ட்டில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.