சினிமா

“அவள் வந்தாள்.. கனவு கண்டாள்.. சாதித்தாள்”.. நயன்தாராவுக்கு சமந்தா பிறந்தநாள் வாழ்த்து!

“அவள் வந்தாள்.. கனவு கண்டாள்.. சாதித்தாள்”.. நயன்தாராவுக்கு சமந்தா பிறந்தநாள் வாழ்த்து!

sharpana

நடிகர் விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினரோடு நடிகை நயன்தாரா தனது பிறந்தநாளை உற்சாகமுடன் கொண்டாடியுள்ளார்.

தமிழ் சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா இன்று தனது 37 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நயன்தாரா நடிப்பில் கடைசியாக ‘அண்ணாத்த’ வெளியானது. தற்போது அட்லீ – ஷாருக்கானின் ‘லயன்’, விஜய் சேதுபதியுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ அல்போன்ஸ் புத்ரனின் புதிய படம், அஸ்வின் சரவணனின் ‘கனெக்ட்’ என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தனது பிறந்தநாளை இயக்குநர் விக்னேஷ் சிவன், சமந்தா, விஜய் சேதுபதி உள்ளிட்டோருடன் உற்சாகமுடன் கொண்டாடியுள்ளார். இதனை சமந்தா அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உற்சாகமுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த ட்விட்டரில்,

“அவள் வந்தாள்
அவள் பார்த்தாள்
அவள் பயந்தாள்
அவள் கனவு கண்டாள்
அவள் நிகழ்த்தி காட்டினாள்
அவள் வென்றாள்

பிறந்தநாள் வாழ்த்துகள் நயன்தாரா” என்று சமந்தா தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.