சினிமா

நயன்தாராவின் புதிய அவதாரம்: கோலமாவு கோகிலா!

நயன்தாராவின் புதிய அவதாரம்: கோலமாவு கோகிலா!

webteam

நடிகை நயன்தாரா நடித்து வரும் கோலமாவுகோகிலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் மார்ச் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் உள்ள ஹீரோயின்களில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர் நயன்தாரா. வேலைக்காரன் வரையிலும் பல படங்களில் நடித்துள்ள இவர், சினிமாவில் நடிக்கத்தொடங்கி 14 வருடங்கள் கடந்தும் தற்போது முதல் இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு அறம், டோரா, வேலைக்காரன் ஆகிய படங்களில் நடித்தார். இதில் ‘அறம்’ நயன்தாராவிற்கு தனி அந்தஸ்த்தை ஏற்படுத்தியுள்ளது. மாயா, டோரா, அறம் போன்ற படங்களில் நயன்தாராவே, ஹீரோ இடத்தையும் சேர்த்து நடித்தார். ஆனால் அதற்கும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்நிலையில் ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் உருவாகும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 5ஆம் தேதி வெளியாகிறது. அத்துடன் முதல் பாடல் மார்ச் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த தகவலை படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.