சினிமா

மச்சான்ஸ் நடிகையின் திருமண ஆல்பம்

மச்சான்ஸ் நடிகையின் திருமண ஆல்பம்

webteam

தமிழில் விஜயகாந்தின் எங்கள் அண்ணா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நமிதா. மச்சான்ஸ் வார்த்தை மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானார். சில தினங்களுக்கு முன் தனது திருமணம் குறித்து நமிதா இன்ஸ்ட்ராகிராமில் தெரிவித்தார். தனது நீண்ட கால நண்பர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்யவுள்ளதாக நமிதா கூறினார். 


இந்நிலையில் திருப்பதியிலுள்ள நட்சத்திர விடுதியில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நேற்று முன் தினம் அவர்களது நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. வீரேந்திர சவுத்திரி, மணமகள் நமிதாவுக்கு மோதிரம் அணிவித்தார். இன்று திருப்பதியிலுள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் அவரது திருமணம் நடைபெற்றது.