சினிமா

பிரியாணி டேஸ்ட்டுதான், அதுக்காக தினமும் சாப்பிட முடியுமா? கேட்கிறார் நமீதா

பிரியாணி டேஸ்ட்டுதான், அதுக்காக தினமும் சாப்பிட முடியுமா? கேட்கிறார் நமீதா

Rasus

என்னதான் ருசியாக இருந்தாலும் பிரியாணியைத் தினமும் சாப்பிட முடியாது. எல்லாவற்றிலும் வித்தியாசம் வேண்டும் என்று நடிகை நமீதா கூறினார்.

மாப்பனார் புரொடக்ஷன் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம், ‘யாகன்’. புதுமுகம் சஜன், அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளனர். வினோத் தங்கவேல் இயக்கியுள்ளார். நிரோ பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை நமீதா, ’வழக்கமான நிகழ்ச்சியிலிருந்து இது வித்தியாசமான நிகழ்ச்சியாகத் தோன்றுகிறது. வழக்கமாக படத்தில் நடிக்கும் கதாநாயகிகளை வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருந்து நடிக்க அழைத்து வருவார்கள். தமிழே தெரியாது. இதில் ஹீரோ சஜன், டென்மார்க்கிலிருந்து வந்துள்ளார். ஹீரோயின் லோக்கலாக இருக்கிறார். என்னதான் ருசியாக இருந்தாலும் பிரியாணியைத் தினமும் சாப்பிட முடியாது. எல்லாவற்றிலும் வித்தியாசம் வேண்டும். இந்தப்படமும் வித்தியாசமாக இருக்கும்’என்றார்.

முன்னதாக பாடல்களை, தயாரிப்பாளர்கள் ‘ஜே.எஸ்.கே’ சதீஷ்குமார், சுரேஷ் காமாட்சி வெளியிட்டனர். நமீதா பெற்றார்.