சினிமா

‘நமிதாவுக்கு மச்சான் கிடைச்சாச்சு’: திருப்பதியில் நாளை திருமணம்

‘நமிதாவுக்கு மச்சான் கிடைச்சாச்சு’: திருப்பதியில் நாளை திருமணம்

webteam

நடிகை நமிதா - வீரேந்திர சவுத்ரி திருமண நிச்சயதார்த்தம் திருப்பதியில் நடைபெற்றது.

தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நமிதா. மச்சான்ஸ் என்ற ஒற்றை வார்த்தை மூலம் தமிழக ரசிகர்களிடம் பிரபலமானார். பட வாய்ப்பு இல்லாமல் இருந்த நமிதா தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டார். சில தினங்களுக்கு முன் தனது திருமணம் குறித்து இன்ஸ்ட்ராகிராமில் தெரிவித்தார். தனது நீண்ட கால நண்பர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்யவுள்ளாதாக நமிதா கூறினார்.

இந்நிலையில் திருப்பதியிலுள்ள நட்சத்திர விடுதியில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் அவர்களது நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. வீரேந்திர சவுத்திரி, மணமகள் நமிதாவுக்கு மோதிரம் அணிவித்தார். திருப்பதியிலுள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் நாளை நமிதா - வீரேந்திர சவுத்திரி திருமணம் நடைபெறவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரை நட்சத்திரங்கள் இந்த திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர்.