நடிகை நமிதா - வீரேந்திர சவுத்ரி திருமணம் திருப்பதியில் நடைபெற்றது.
தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நமிதா. மச்சான்ஸ் என்ற ஒற்றை வார்த்தை மூலம் தமிழக ரசிகர்களிடம் பிரபலமானார். சில தினங்களுக்கு முன் தனது திருமணம் குறித்து நமிதா இன்ஸ்ட்ராகிராமில் தெரிவித்தார். தனது நீண்ட கால நண்பர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்யவுள்ளதாக நமிதா கூறினார்.
இந்நிலையில் திருப்பதியிலுள்ள நட்சத்திர விடுதியில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நேற்று முன் தினம் அவர்களது நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. வீரேந்திர சவுத்திரி, மணமகள் நமிதாவுக்கு மோதிரம் அணிவித்தார். திருப்பதியிலுள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு நமிதா - வீரேந்திர சவுத்திரி திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.