சினிமா

மீரா ஜாஸ்மினா இது? ஷாக் ஆன ரசிகர்கள்

மீரா ஜாஸ்மினா இது? ஷாக் ஆன ரசிகர்கள்

webteam

பிரபல நடிகை மீரா ஜாஸ்மினின் மாற்றம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் மீரா ஜாஸ்மின். இவர் மாதவன் உடன் நடித்த ‘ரன்’, விஷாலுடன் கலக்கிய ‘சண்டைக்கோழி’ உள்ளிட்ட பல படங்கள் ஹிட் ஆகியுள்ளன. தமிழ் சினிமாவில் இவரின் சேட்டையான நடிப்புக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. கேரளாவைச் சேர்ந்த இவர் கடந்த 2014ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின் திரைப்படங்களில் பெரும்பாலும் நடிக்காத மீரா, அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வந்தார். திருமணத்திற்கு பின் விடிவி கணேஷ், சந்தானம் ஆகியோருடன் அவர் நடித்த ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் கூட இயல்பாகவே தோன்றினார். இந்நிலையில் நகைக்கடைக்கு வந்துள்ள மீரா ஜாஸ்மின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

அதில் மீரா ஜாஸ்மினிடம் காணப்படும் மாற்றங்கள், ‘மீரா ஜாஸ்மினா இது?’ என்ற கேள்வியை எழுப்பும் வகையில் உள்ளது.