சினிமா

ரசிகர்களுடன் லைவ் சாட் செய்கிறார் மஞ்சிமா மோகன்

ரசிகர்களுடன் லைவ் சாட் செய்கிறார் மஞ்சிமா மோகன்

webteam

நடிகை மஞ்சிமா மோகன் சமூக வலைதளத்தில் தன்னுடன் சாட் பண்ண வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். தனது நடிப்பு எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி ரசிகர்களுடன் ஆலோசனை கேட்பதற்காக அவர் லைவ் சாட்டிங்கில் பங்கேற்கிறார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெளியான அச்சம் என்பது மடமையடா’ மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இந்தப் படத்தில் சிம்புவுடன் அவர் இணைந்து நடித்த ‘தள்ளிப் போகாதே’ பாடல் அதிக அளவில் பேசப்பட்டது. சமீபத்தில் வெளியான ஏ.ஆர்.ரஹ்மான் ஆல்பத்தில் அதிகம் பேர் விருப்பிய பாடலாக அந்தப் பாடல் இருந்தது. அந்தப் படத்திற்கு பிறகு மஞ்சிமா தனது சினிமா வாய்ப்புகளை மிக நிதானமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 
இந்நிலையில் அவர் ரசிகர்களின் கருத்தை உணர விரும்புவதாகவும் அதற்காக ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் நேரலையில் விவாதிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அவரை வருகின்ற 5ஆம் தேதி ஆன்லைனில் சந்திக்கலாம்.