சினிமா

’சாவித்திரி’க்காக குண்டாகிறார் கீர்த்தி சுரேஷ்

’சாவித்திரி’க்காக குண்டாகிறார் கீர்த்தி சுரேஷ்

Rasus

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு ’மகாநடி’ என்ற பெயரில் சினிமாவாக உருவாகிறது. நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். துல்கர் சல்மான், ஜெமினி கணேசனாக நடிக்கிறார்.

தற்போது கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன. ‘இதில் இளவயது சாவித்ரியாக, கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். படத்துக்காக அவரை கொஞ்சம் வெயிட் போட கேட்டுள்ளோம். முக்கியமான காட்சி என்பதால் அதற்கு சம்மதித்துள்ளார் கீர்த்தி’ என்றது படக்குழு.