அமைச்சர் செல்லூர் ராஜூதான் எனது விருப்பமான ஹீரோ என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் நிறைய பேர் தன் விருப்பமான ஹீரோ யார் என கேள்வி எழுப்புவதாகவும், அதற்கு கீழ் உள்ள படத்தைப் பார்க்கவும் எனக்கூறி அமைச்சர் செல்லூர் ராஜூவின் படத்தைப் போட்டு சூப்பர் ஹீரோ எனக் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கஸ்தூரி, தமிழகத்தில் தற்போது உள்ள பிரச்னைகளைக் குறித்து கேட்காமல், ஊடகங்கள் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து மட்டும் ஏன் பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.