சினிமா

“பாலிவுட் சினிமா செய்த பாவங்கள் சுத்தமானது" - ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ குறித்து கங்கனா ரனாவத்

“பாலிவுட் சினிமா செய்த பாவங்கள் சுத்தமானது" - ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ குறித்து கங்கனா ரனாவத்

EllusamyKarthik

இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 1990-களில் காஷ்மீரில் வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்ட திரைப்படம் இது. இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் புகழ்ந்துள்ளார். 

“பாலிவுட் சினிமா இதுவரை செய்த பாவங்கள் அனைத்தையும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் சுத்தம் செய்துள்ளது. அபத்தமான திரைப்படங்களை உருவாக்கி. அதை புரொமேஷன் செய்யும் பாலிவுட் சினிமா பிரபலங்கள் இந்த திரைப்படத்தை புரொமோட் செய்ய வேண்டும். 

இந்த படம் பல வழக்கங்களை உடைத்து வருகிறது. ஒவ்வொரு காட்சியிலும் அரங்கம் முழுவதும் நிரம்பி வழிகிறது. கொரோனாவுக்கு பிறகு திரையரங்கம் பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் தான் என்ற கண்ணோட்டத்தை இது தகர்த்துள்ளது” என கங்கனா தெரிவித்துள்ளார். 

பாக்ஸ் ஆபிஸில் தரமான வசூலை ஈட்டி வருகிறது இந்த திரைப்படம். இந்த படத்திற்கு மூன்று மாநில அரசுகள் வரி விலக்கு வழங்கியுள்ளன. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடங்கி பிரதமர் மோடி வரை அனைவரும் இந்த படத்தை பாராட்டியுள்ளனர்.