தெலுங்கு நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் தற்கொலை செய்து கொண்டார்.
1970, 80-ல் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜெயசுதா. தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் ஆந்திராவில் அரசியலில் ஈடுபட்ட அவர் எம்எல்ஏ-வாகவும் தேர்வானார். இவரது கணவர் நிதின் கபூர். படத் தயாரிப்பாளரான இவர் நேற்று மும்பபையில் உள்ள கட்டடம் ஒன்றில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நிதின் கபூரின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும் கடந்த சில நாட்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஜெயசுதா- நிதின் கபூர் தம்பதியினருக்கு கடந்த 1985-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.