சினிமா

ஹன்சிகா, ஆதி இணைந்து நடிக்கும் ‘பார்ட்னர்’

ஹன்சிகா, ஆதி இணைந்து நடிக்கும் ‘பார்ட்னர்’

webteam

ஆர்எஃப்சி கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.பி கோலி தயாரிக்கும் புதிய படமான ‘பார்ட்னர்’ என்ற படத்தின் மூலம் முதன்முதலாக ஆதியும் ஹன்சிகாவும் இணைகிறார்கள். 

‘ஈரம்’,‘அரவான்’,‘யு-டர்ன்’ ஆகிய படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆதி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருப்பவர் ஹன்சிகா. இருவருவம் முதன்முறையாக ‘பார்ட்னர்’ படத்தில் இணைய உள்ளனர். இதில் ஆதிக்கு ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்க உள்ளார். இவர்  ‘குப்பத்து ராஜா’ படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர். மேலும் படத்தில் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோசங்கர், விடிவி கணேஷ், ஜான்விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

‘டோரா’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய மனோஜ் தாமோதரன் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இப்படத்தைப் பற்றி இயக்குநர் மனோஜ் தாமோதரன், " முழுக்க முழுக்க காமெடியை அடிப்படையாக கொண்டது இப்படம். அதே சமயம் படத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த ஒரு பேண்டசி விசயமும் இருக்கிறது. 

இந்த வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கிறது.  படத்தில் மிக முக்கிய அம்சமாக ஹன்சிகாவின் கதாபாத்திரம் இருக்கும். நடிகர் ஆதிக்கு இப்படம் அவரது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். மேலும் ஆதியின் ஜோடியாக நடிக்கும் பாலக் லல்வாணி உள்பட படத்தில் பங்குபெறும் அத்தனை கதாபாத்திரங்களும் பெரிதாகப் பேசப்படும். ‘பார்ட்னர்’ நிச்சயம் பக்கா எனர்ஜிடிக் மற்றும் எண்டெர்டெயின்மெண்ட் மூவியாக இருக்கும்" என்றார்.  

இன்று பூஜையோடு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது குறிப்படத்தக்கது.