சினிமா

தசராவை முன்னிட்டு தன் ஊழியருக்கு கார் பரிசளித்த பாலிவுட் நடிகை

தசராவை முன்னிட்டு தன் ஊழியருக்கு கார் பரிசளித்த பாலிவுட் நடிகை

Sinekadhara

பாலிவுட்டில் மாதுரி தீக்சித் ஆடி அசத்திய ’ஏக் தோ தீன்’ பாடலின் ரீமேக்கில் அவருக்கு ஈடுகொடுத்து ஆடி அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். இவர் தசராவை முன்னிட்டு விலையுயர்ந்த காரை தனது ஊழியர் ஒருவருக்கு பரிசாகக் கொடுத்துள்ளார்.

மும்பையில், கார் சாவியை அவரிடம் கொடுத்து, காருக்கு பூஜை செய்த வீடியோ ஒன்றை ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் படப்பிடிப்புக்காக டிராபிக் போலீஸ் உடையில் இருக்கும் ஜாக்குலினை அவரது ஊழியர் நகரச்சொல்லிவிட்டு கார் முன்பு தேங்காயை உடைக்கிறார்.

’’தசராவை முன்னிட்டு தனது ஊழியருக்கு கார் பரிசாக அளித்துள்ளார் ஜாக்குலின். அவர் இனிமையானவர் அல்லவா?’’ என்று குறிப்பிட்ட அந்த வீடியோவை பலரும் பாராட்டி வருகின்றனர்.