திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகை நல்லெண்ணைய் சித்ரா, மீண்டும் நடிக்க வருகிறார்.
கே.பாலசந்தரால் ’அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. ‘ராஜபார்வை’ படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர், மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ’ஆட்ட கலசம்’ படம் மூலம் ஹீரோயின் ஆனார். பிறகு ரஜினியின் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட 300 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், நல்லெண்ணெய் விளம்பரம் மூலம் மேலும் பிரபலமானார்.
பிறகு திருமணமாகி செட்டிலான அவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இப்போது மீண்டும் நடிக்க இருக்கிறார்.
'என் மகளை வளர்க்கும் பொறுப்பு இருந்ததால் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தேன். இப்போது மகள் 10 வது படித்துக் கொண்டிருப்பதால் இனி நடிப்பது என்று முடிவெடுத்துள்ளேன். மேக்கப் போட்டு 18 வருடங்கள் ஆகி விட்டது. நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன்’ என்கிறார் சித்ரா.