சினிமா

நடிகை கடத்தல் வழக்கு… கேரள எம்எல்ஏக்களிடம் விசாரணை

நடிகை கடத்தல் வழக்கு… கேரள எம்எல்ஏக்களிடம் விசாரணை

webteam

மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கேரள எம்எல்ஏக்கள் இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

நடிகை கடத்தல் வழக்கில் மல்லுவுட்டின் முன்னணி நடிகரான திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் திலீப்புக்கு நெருக்கமான ஆலுவா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான அன்வர் சதாத் மற்றும் கொல்லம் தொகுதி ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவும், நடிகருமான முகேஷ் ஆகியோரிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அன்வரிடம் நடிகர் திலீப்புடனான நெருக்கம், வெளிநாட்டு பயணங்கள் மற்றும் செல்போன் உரையாடல் ஆகியவை குறித்து விசாரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, நடிகர் முகேஷிடம் ஓட்டுனராகப் பணிபுரிந்த பல்சர் சுனில் குறித்து விசாரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.