சினிமா

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி

sharpana

 நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 தமிழ் நடிகையும் பாடகியுமான நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பாடும் வீடியோவுடன் “கடந்தவாரம் எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டேன். எனது நண்பர்களும்  குடும்ப உறுப்பினர்களும் என்னை கவனித்து வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி. கொரோனாவிலிருந்து தொடர்ந்து குணமாகி வருகின்றேன். இது மோசமான கொரோனா கால நெருக்கடி. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை” என்று நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். 

கடைசியாக விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.