சினிமா

நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் கார்த்திக் சுப்பராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷின் ’பூமிகா’

நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் கார்த்திக் சுப்பராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷின் ’பூமிகா’

sharpana

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பூமிகா’ திரைப்படம் நேரடியாக டிவியில் வெளியாகவுள்ளது.

’கனா’, ‘திட்டம்’ இரண்டு படங்களைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘பூமிகா’ படத்தில் நடித்திருக்கிறார். ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தை ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். ’பூமிகா’ ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று சோனி லைவ் ஓடிடியில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’ திரைப்படம் கவனம் ஈர்த்துள்ளதால், பூமிகாவின் வெளியீட்டு தேதியையும் தற்போது அறிவித்திருக்கிறது படக்குழு.

தியேட்டரிலும் இல்லாமல், ஓடிடியிலும் இல்லாமல் நேரடியாக விஜய் டிவியில் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி படம் வெளியாகிறது. பட வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருப்பதால், 23-ஆம் தேத் அன்றே நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ’பூமிகா’ வெளியாகிறது. ஏற்கெனவே, ‘ஏலே’, ’புலிக்குத்தி பாண்டி’, ‘வெள்ளை யானை’ உள்ளிட்டப் படங்கள் நேடியாக டிவியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.