சினிமா

சூர்யா உட்பட 8 நடிகர்களுக்கு பிடிவாரண்ட்!

சூர்யா உட்பட 8 நடிகர்களுக்கு பிடிவாரண்ட்!

Rasus

நடிகர் சூர்யா உட்பட 8 நடிகர்களுக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டார். அப்போது அவர், மேலும் சில நடிகைகள் பாலியல் தொழில் செய்துவருவதாகக் கூறினாராம். இதை சில பத்திரிகைகள் எழுதியிருந்தன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில் கண்டனக் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய நடிகர்கள், பத்திரிகையாளர்களை தரக்குறைவாகப் பேசினர்.
கடுமையாக விமர்சித்த நடிகை ஸ்ரீபிரியா, சத்யராஜ், விஜயகுமார், சரத்குமார், சூர்யா, அருண் விஜய், விவேக், இயக்குனர் சேரன் ஆகிய 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் பத்திரிகையாளர்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைக்கு சம்பந்தப்பட்ட நடிகர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டும் அவர்கள் ஆஜராகவில்லை.

இதையடுத்து சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீலகிரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.