ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சர்க்கார்’ படத்தில் யோகி பாபுவின் டப்பிங் ஓவர் என ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
“கோலமாவு கோகிலா” படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ’சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார் யோகி பாபு.விறுவிறுப்பான அரசியல் பின்னணியைக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி உட்பட பலர் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தனது டப்பிங்கை முடித்திருக்கிறார் யோகி பாபு. இதையடுத்து காந்தி ஜெயந்தி அன்று இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு படம் வெளியாகிறது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்தப் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முழு இசை வெளியீ்ட்டுக்கு முன்பாக படத்தின் ஒரு பாடல் வரும் 24 ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.