சினிமா

யோகிபாபுவின் ‘வீரப்பனின் கஜானா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

யோகிபாபுவின் ‘வீரப்பனின் கஜானா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

sharpana

யோகிபாபுவின் ’வீரப்பனின் கஜானா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் யோகிபாபு பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில், யோகிபாபு நடிப்பில் ‘மண்டேலா’ திரைப்படம் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், அவரின் ‘வீரப்பனின் கஜானா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை, அறிமுக இயக்குநர் யாசின் இயக்குகிறார்.

‘ராட்சசி’ படத்தின் இயக்குநர் கவுதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்கள் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. சத்தியமங்கலம் வனப்பகுதியையும் வீரப்பனையும் மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார்.