சினிமா

பண்பாட்டை காக்க ‌ஜல்லிக்கட்டு தேவை... நடிகர் விவேக்

பண்பாட்டை காக்க ‌ஜல்லிக்கட்டு தேவை... நடிகர் விவேக்

webteam

நாட்டு மாடுகளை அழிவில் இருந்து காக்க ஜல்லிக்கட்டை நடத்த வேண்டியது அவசியம் என நடிகர் விவேக் கூறியுள்ளார்.

சென்னை வெளிவட்ட சாலையில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நடி‌கர்கள் விவேக்,எஸ்.வி சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விவேக், தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டை காக்க ‌ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நடத்த வேண்டும் கூறினார். இதேபோல் எஸ்.வி.சேகரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.