திரைப்பட நடிகர்கள் யாராக இருந்தாலும் மக்களுக்கு நற்பணி செய்திருந்தால் மட்டுமே அரசியலில் வெற்றிபெற முடியும் என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
தனது 56ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை தியாகராய நகரில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட விவேக், மரக்கன்றுகளை நட்டதோடு, கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், எம்.ஜி.ஆர் நடிகராக இருக்கும்போதே மக்கள் பணி செய்ததாலும், தன் படங்களில் நீதிபோதனைகளை வழங்கியதாலும்தான் அரசியலில் மிகப்பெரிய வெற்றியைக் காணமுடிந்தது எனக் கூறினார்.