சினிமா

“நடிகர் விவேக் மறைவு இயற்கைக்கு ஏற்பட்ட இழப்பு” - நீலகிரி மாவட்ட ஆட்சியர்

kaleelrahman

நீலகிரி மாவட்டத்தில் பசுமையை பாதுகாக்க நடிகர் விவேக் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நான்கு கட்டமாக நீலகிரியில் முகாமிட்டு 4 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை மேற்கொண்டார். அவரது இழப்பு இயற்கைக்கு ஏற்பட்ட இழப்பு என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

 “உயிர்ச்சூழல் மண்டலமான நீலகிரியை பாதுகாக்கவும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும், சோலை மரக்கன்றுகளை நடவு செய்யவும் நடிகர் விவேக் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை நான்கு முறை பங்கேற்று 4 லட்சம் சோலை மரக்கன்றுகளை நடும் பணியை மேற்கொண்டார்.

உதகையில் எல்லநல்லி, கோத்தகிரி, காந்தல், போன்ற பகுதிகளில் இந்த மண்ணிற்கே உரிய சோலை மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் இயற்கை அவரை அழைத்துக் கொண்டது. இது என்னை மிகவும் பாதித்துள்ளது” என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.