பொதுமக்கள் என்ற மகாசக்தி யாரை நினைக்கிறார்களோ அவரே தேர்தலில் வெற்றி பெற முடியும் என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குருமலை ஸ்ரீ அலங்காரியம்மன் ஸ்ரீகருப்பசாமி திருக்கோயில் சிவராத்திரி விழாவில் நடிகர் விவேக் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை மெகா கூட்டணி அமைத்தாலும், பொதுமக்கள் என்ற மகாசக்தி முன்னால் தான் கூட்டணி வைத்திருக்கிறார்கள். பொதுமக்கள் என்ற மகாசக்தி யாரை நினைக்கிறார்களோ அவரே தேர்தலில் வெற்றிப் பெற முடியும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமாலும் தேர்தலில் நிற்கலாம், எல்லோரும் கூட்டணி வைக்கலாம். அதில் தவறு இல்லை. முடிவு என்பது மக்கள் கையில் உள்ளது. இந்த தேர்தல் மிகவும் எதிர்பார்பாக உள்ளது. அதே நேரத்தில் மக்கள் முடிவு எப்போதும் சரியாக இருக்கும்” என கூறினார்.