சினிமா

படப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஷ்ணு விஷால் கழுத்தில் காயம்!

படப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஷ்ணு விஷால் கழுத்தில் காயம்!

webteam

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஷ்ணுவிஷால் படுகாயமடைந்தார். அவர் 4 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதால் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழில், வெண்ணிலா கபடிக்குழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன் உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் விஷ்ணு விஷால். இப்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன், இதன் ஷூட்டிங்கில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தபோது, காயம் அடைந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்னும் 4 வாரங்கள் ஓய்வில் இருக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

“ கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வலி பயங்கரமாக இருக்கிறது. கைகளிலும் வலி. சிகிச்சைக்குப் பின் நான்கு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் குணமாகி படப்பிடிப்பில் பங்கேற்பேன் என்று நம்புகிறேன். உங்கள் ஆதரவும் ஆசிர்வாதமும் தேவை’’ என்று தெரிவித்துள்ளார்.

அவர் அறிமுகமான ’வெண்ணிலா கபடிக் குழு’ படம் வெளியாகி, இன்றோடு பத்து வருடம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.