சினிமா

தலைவரானார் விஷால்

Rasus

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு இரண்டு வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். கடந்த தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான அணி வெற்றிப்பெற்றது. அவர்களது பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற தேர்தலில் காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. விஷால், ஆர்.ராதாகிருஷ்ணன், கேயார் ஆகிய மூவர் தலைமையிலான அணிகள் தேர்தலில் போட்டியிட்டன.

மொத்தமுள்ள ஆயிரத்து 211 வாக்குகளில் 1050 வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே வி‌ஷால் அணி முன்னிலை பெற்று வந்தது. இறுதியில் 479 வாக்குகள் பெற்று தலைவர் பதவிக்கான தேர்தலில் நடிகர் விஷால் வெற்றி பெற்றார். ராதாகிருஷ்ணன் 333 வாக்குகளும், கேயார் 224 வாக்குகளும் பெற்றனர். இதேபோல் பொருளார் பதவிக்கு விஷால் அணியில் சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பிரபு வெற்றி பெற்றார்.