சினிமா

விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ படப்பிடிப்புத்தளப் புகைப்படங்கள் வெளியீடு

விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ படப்பிடிப்புத்தளப் புகைப்படங்கள் வெளியீடு

sharpana

நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் படப்பிடிப்புத்தள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஷால் ‘எனிமி’, ‘வீரமே வாகை சூடும்’ படங்களில் நடித்து முடித்துள்ளார். ‘எனிமி’ வரும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகிறது. ’வீரமே வாகை சூடும்’ வரும் டிசம்பரில் வெளியாகிறது. இப்படத்தை து.ப சரவணன் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிடோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டப்பிங் பணிகளும் சமீபத்தில் தொடங்கியது.

இந்த நிலையில், படத்தில் சேர்க்கவேண்டிய ஒரு காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறது படக்குழு. இயக்குநர் து.ப சரவணன் மற்றும் விஷால் இருக்கும் படப்பிடிப்புத்தள புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு.