’துப்பறிவாளன்’ படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் விஷால் இன்று காயமடைந்தார்.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், சிம்ரன் உட்பட பலர் நடிக்கும் படம், ’துப்பறிவாளன்’. இதன் படப்பிடிப்பு பிச்சாவரத்தில் நடந்து வருகிறது. விஷால் நடிக்கும் சண்டைக்காட்சிகளுக்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அங்கு நடந்து வருகிறது. இன்று நடந்தப் படப்பிடிப்பில் எதிரிகளை அவர் பாய்ந்து தாக்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக அவர் கயிற்றில் தொங்கியபடி பாய்ந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக கயிறு அறுந்ததால் தவறி விழுந்தார் விஷால். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. டாக்டர்கள் விரைந்து சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர்.