சினிமா

விஷால் - ஆர்யாவின் ’எனிமி’ டீசர் நாளை வெளியீடு

விஷால் - ஆர்யாவின் ’எனிமி’ டீசர் நாளை வெளியீடு

sharpana

விஷால் - ஆர்யா இணைந்து நடிக்கும் ’எனிமி’ திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

’அரிமா நம்பி’, ’இருமுகன்’, ‘நோட்டா’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர், தற்போது விஷால் - ஆர்யா நடிப்பில் ’எனிமி’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த, திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார் ஆர்யா. இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது.

’அவன் இவன்’ படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. சமீபத்தில்தான், இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. இந்த நிலையில், நாளை டீசர் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது படக்குழு.