சினிமா

நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி

நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி

sharpana

நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு நடவடிக்கைகள், தடுப்பூசி போன்றவற்றின் மூலம் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை வெகுவாக அரசுகள் குறைத்திருந்தாலும் அதன், தாக்கம் இன்னும் குறையவில்லை. தொடர்ந்து பொதுமக்களும் பிரபலங்களும் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் வருகின்றனர்.

தமிழகத்தில் சமீபத்தில் திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது வீட்டிலேயே மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து, அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #chiyaanVikram ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து உடல்நலம் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

விக்ரம் நடிப்பில் ‘மகான்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘கோப்ரா’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளன. அடுத்ததாக இயக்குநர் பா. ரஞ்சித்தின் 'விக்ரம் 61’ படத்திலும் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.