சினிமா

மணிரத்னம் படம்.. ஓடிடி தளம்... விஜய்-ன் ஊரடங்கு நாட்கள்..!

மணிரத்னம் படம்.. ஓடிடி தளம்... விஜய்-ன் ஊரடங்கு நாட்கள்..!

webteam

பிரபலங்களுக்கு ஊரடங்கு நாட்கள் ஒருவகையில் கொடை போல கிடைத்திருக்கின்றன. மனசுக்குப் பிடித்த படங்களைப் பார்ப்பது, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது என என்றுமில்லாத உற்சாகத்தில் வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கியுள்ளார்கள். நம்ம விஜய் என்ன செய்கிறார்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் வெளியீட்டுக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தன் நண்பர்கள் மற்றும் மாஸ்டர் படக்குழுவுடன் நடத்திய உரையாடல் தொடர்பான படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக சுற்றிவருகின்றன. தற்போது அவர் வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதை மிகவும் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

கனடாவில் இருந்து மகன் சஞ்சய் வீட்டுக்குத் திரும்பியதில் மகிழ்ந்துள்ள விஜய், இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பழைய படங்களை மீண்டும் பார்த்து ரசித்துவருகிறாராம். கூடவே ஓடிடி தளத்தில் புதிய படங்களைப் பார்ப்பதில் நேரத்தைச் செலவிட்டுவருகிறார். மாஸ்டர் படத்தை பொங்கலுக்குக் கொண்டுவரலாமா என்ற யோசனையிலும் விஜய் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

மாஸ்டருக்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் இணைவார் எனக் கூறப்படும் நிலையில், விரைவில் அந்தப் படத்திற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.