சினிமா

“நாம் கோல் போடுவதை தடுக்க ஒரு கூட்டம் இருக்கும்” - விஜய் சூசகம்

“நாம் கோல் போடுவதை தடுக்க ஒரு கூட்டம் இருக்கும்” - விஜய் சூசகம்

rajakannan

வாழ்க்கையும் கால்பந்து போலத்தான், நாம கோல் போடுறதை தடுக்க ஒரு கூட்டம் இருக்கும் என ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவில் பேசிய விஜய், “வாழ்க்கை என்பது கூட கால்பந்து போட்டிதாங்க. நாம கோல் போட முயற்சி பண்ணுவோம். அத தடுக்க ஒரு கூட்டம் வரும். நம்மகூட இருக்கவனே சேம் சைடு கோல் போட்ருவான். யாரோட அடையாளத்தையும் எடுத்துக்காதீங்க. உங்களுக்குனு ஒரு அடையாளம் உருவாக்குங்க. புடிச்சா எடுத்துக்கோங்க. இல்லைனா விட்டுடுங்க.

பெண்கள் ஜெயிக்கிற படத்துல, வாழ்க்கையில ஜெயிச்ச நயன்தாரா இருக்கிறதும் சந்தோஷம்தான். உழைத்தவர்களை மேடையில் ஏற்றி அழகு பார்க்கும் முதலாளி ரசிகர்கள் தான். காரில் செல்லும்போது கருணாநிதி பற்றி தவறாக பேசியவரை காரில் இருந்து இறக்கிவிட்டார் எம்.ஜி.ஆர். எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும்.

யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்க உட்கார வைத்தீங்கன்னா எல்லாம் சரியாக இருக்கும். அரசியலில் புகுந்து விளையாடுங்க; ஆனால் விளையாட்டுல அரசியலை கொண்டு வராதீங்க” என்று கூறினார்.