சினிமா

விஷாலுடன் சண்டையா? விஜய்சேதுபதி ஓபன் டாக்

விஷாலுடன் சண்டையா? விஜய்சேதுபதி ஓபன் டாக்

webteam

‘96’ திரைப்படம் வெளியான போது ஏற்பட்ட பைனான்ஸ் விவகாரத்தில் நடிகர் விஷால் மீது தவறே இல்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி, த்ரிஷா  நடிப்பில் ‘96’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது. இந்நிலையில் தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு ரூ.1.50 கோடி ரூபாய் பைனான்ஸ் மூலம் நடிகர் விஷால் தரப்பில் வாங்கிக்கொடுக்கப்பட்டது. அந்தத் தொகையை தயாரிப்பாளர் நந்தகோபால் ‘96’ பட  ரிலீஸின்போது திரும்ப தருவதாக கூறியதால் பட ரிலீஸுக்கு முன்பு வரை அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சரியான முடிவை எட்டாததை அடுத்து ‘96’ படத்தின் நாயகன் விஜய்சேதுபதி அந்தத் தொகையை தருவதாக கூறினார். இதனையடுத்து பிரச்னை தீர்ந்து ‘96’ படம் ரிலீஸானது. 

இதுதொடர்பாக தற்போது விஷால் தரப்பை விசாரித்தபோது,  “ நந்தகோபாலுக்கு பைனான்ஸ் மூலம் வாங்கிக்கொடுத்த ரூ1.50 கோடி தொகையை விஷாலே கொடுக்க முடிவு செய்திருக்கிறார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் 96 படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட விஜய் சேதுபதியிடம், படம் வெளியீடு தொடர்பாக நடிகர் விஷால் மீது உங்களுக்கு வருத்தம் இல்லையா என கேள்வி எழுப்பினர் . அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “விஷால் நல்ல மனுஷன். அவர் மீது தவறே இல்லை. அவர் சூழ்நிலை வேறு. பைனான்ஸ் விஷயத்தில் அவர் பல கஷ்டங்களை சந்தித்து வரலாம். அது யாருக்கும் தெரியாது. அவர் நிலைமை அது. அவர் மீது தவறே இல்லை. அதனால் ஒரு துளி வருத்தமும் இல்லை” என தெரிவித்தார்