நடிகர் விஜய் சேதுபதியிடம் ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு திருச்சியைச் சேர்ந்த ஒருவர் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் விஜய் சேதுபதி ரேணிகுண்டா இயக்குநர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் கருப்பன் படத்தில் நடித்து வருகிறார்.
அந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று முன் தினம் வெளியானது. அதில் விஜய் சேதுபதி ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குவது போன்ற காட்சி வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, இயக்குநர் பன்னீர் செல்வம் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டுப் பேரவைச் செயலாளர் காத்தான் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
அதில். காளையின் பெயருக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில், கருப்பன் படம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என இயக்குநர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.