சினிமா

மெர்சல் வசனம் : விஜய் விளக்கம்!

மெர்சல் வசனம் : விஜய் விளக்கம்!

webteam

காலத்தின் அவசியம் கருதியே மெர்சல் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். 

விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில்  வெளியான படம், ‘மெர்சல்’ . இந்த படத்தில் விஜய் பேசிய ஜிஎஸ்டி உள்ளிட்ட சில வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னையில் ‌நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விஜய், காலத்தின் அவசியம் கருதியே மெர்சல் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக தெரிவித்துள்ளார். மேலும், மெர்சல் திரைப்பட வெளியீட்டின் போது ஏற்பட்ட பிரச்னையின்போது உ‌றுதுணையாக இருந்தவர்களுக்கு அவர் நன்றியை தெரிவித்துள்ள‌ர்.