நடிகர் சஞ்சீவின் ட்விட்டர் பக்கத்தில் உள்ள பல புகைப்படங்களை தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் 4 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் திரைப்படங்கள் எல்லாம் இன்னமும் படப்பிடிப்பை முழுமையாக தொடங்கவில்லை. நடிகர் நடிகைகள் தங்கள் வீடுகளில் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகிறார்கள். இந்நிலையில் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்த நடிகர் விஜயின் புகைப்படம் இணையத்தில் நேற்று வைரலானது
நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நேற்று தன்னுடைய பால்யகால நண்பர்களான சஞ்சீவ், ஸ்ரீநாத், ராம்குமார் உள்ளிட்டவர்களுடன் நடிகர் விஜய் வீடியோகாலில் பேசியுள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள சஞ்சீவ், நண்பர்களே குடும்பம் என்று வீடியோ கால் புகைப்படங்களை பதிவிட்டார். அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட சிலரும் உள்ளனர்.
குறிப்பாக மாம்ஸ் என்று பதிவிட்டு ஷேர் செய்யப்பட்டுள்ள விஜய் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் சஞ்சீவின் ட்விட்டர் பக்கத்தில் உள்ள பல புகைப்படங்களை தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
சஞ்சீவ் கல்லூரி காலத்தில் இருந்தே விஜயின் நண்பர் என்பதால் பல புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். கல்லூரியில் எடுத்த புகைப்படம், 2014ம் ஆண்டு வெளிநாடு சுற்றுலா சென்ற புகைப்படம் என பல புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் தோண்டி எடுத்து ஷேர் செய்து வருகிறார்கள். சஞ்சீவ் பகிர்ந்தது போலவே நண்பர்கள் தான் குடும்பம் என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.