LEO
LEO Twitter
சினிமா

“KEEP CALM AND FACE THE DEVIL”-கதை சொல்லும் டேக் லைன்கள்! வெளியானது 'லியோ' படத்தின் அடுத்த போஸ்டர்!

Rishan Vengai

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், அடுத்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'மாஸ்டர்' வெற்றியைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் ஜோடி 'லியோ'வில் இணைந்துள்ளது.

அடுத்தடுத்து வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்துவந்துள்ள இயக்குநர் என்பதால், லோகேஷ் கனகராஜின் 'லியோ' திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

”KEEP CALM AND..”-கதை சொல்லும் டேக் லைன்கள்!

'லியோ' திரைப்படத்தின் தெலுங்கு போஸ்டரை செப்டம்பர் 17ஆம் தேதி படக்குழு வெளியிட்டது. அதன் டேக் லைனாக “ KEEP CALM AND AVOID THE BATTLE” என எழுதப்பட்டிருந்தது. பின்னர் அதன் தொடர்ச்சியாக, விநாயகர் சதுர்த்தி அன்று 'லியோ' திரைப்படத்தின் கன்னட போஸ்டரை, படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டது. அதிலும் “Keep Calm And Plot Your Escape” என்ற டேக் லைனுடன், விஜய்யின் மாஸான தோற்றம் போன்றவை வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டது.

LEO

இந்நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற நிலையில், அதை அப்படியே தொடர்ந்து செல்லும் வகையில் லியோ தமிழ் போஸ்டரையும் வெளியிட்டு அசத்தியது படக்குழு. போஸ்டரில் சஞ்சய் தத்தின் கழுத்தை ஆக்ரோஷமாக விஜய் பிடித்திருப்பது போல் உள்ளது.

இந்தப் போஸ்டரில் “KEEP CALM AND PREPARE FOR BATTLE" டேக் லைன் எழுதப்பட்டிருந்த நிலையில், இன்றைய நாளில் வெளியாகியிருக்கும் போஸ்டரில் “KEEP CALM AND FACE THE DEVIL” என எழுதப்பட்டிருப்பது படத்தின் இண்டர்வெல் வரையிலான பிளாட்டை உணர்த்துவது போல் உள்ளது.

இதன் மூலம் “பிரச்னை வரும் போது அமைதியாகவும், விரட்டும் போது தப்பித்து செல்லுவதுமாய் இருக்கும் விஜய், பின்னர் தப்பிப்பதற்கான வழியை ஏற்படுத்திவிட்டு யுத்தத்திற்கு தயாராவதும் முடிவில் டெவிலை எதிர்த்து நின்று வேட்டையாடுவதுமாய்” இந்த டேக் லைன்கள் அமைந்துள்ளன. படத்தின் பெயர் வெளியிட்டீற்கான “பிளடி ஸ்வீட்” கிளிம்ப்ஸ் வீடியோவிலும், ஒரு கும்பல் விஜயை தேடிவருவது போலவும் அவர் கையில் வாளுடன் யுத்தத்திற்கு தயாராவதுமாய் இருக்கும். ஒருவேளை இது கதைக்குள்ளாக இருக்கும் பிளாட்களின் டேக் லைனாக இருக்கும் பட்சத்தில், அடுத்த டேக் லைன்களில் இன்னும் சில சர்ப்ரைஸ்கள் விஜய் ரசிகர்களுக்கு காத்திருப்பது போலவே தெரிகிறது. இந்த லியோவில் ரோலக்ஸ், விக்ரம் போன்ற பெயர்கள் இடம்பெறுமா என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாக இருக்கிறது.