சினிமா

விஜய்யோட அமைதி இருக்கே... நித்யா வியப்பு!

விஜய்யோட அமைதி இருக்கே... நித்யா வியப்பு!

webteam

அட்லி இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார் நித்யா மேனன். விஜய்யின் அமைதி தனக்கு பிடிக்கும் என அவர் கூறினார். அவர் மேலும் கூறும் போது, ‘இந்தப் படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நானும் நடிக்கிறேன். விஜய்யுடன் நடிப்பது வித்தியாசமான அனுபம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் அமைதியாக இருப்பார். அது எனக்குப் பிடிக்கும். மற்ற விஷயங்கள் எதிலும் அவர் தலையிட மாட்டார். இதற்கு மேல் அந்தப் படம் பற்றி எதுவும் தெரிவிக்க இயலாது. நான் படம் இயக்கப் போவதாக வரும் தகவல்கள் உண்மையில்லை. அந்த வதந்தி எங்கிருந்து கிளம்பியது என தெரியவில்லை. அது உண்மையில்லை என்றாலும் எனக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது. நடிகையாக நான் இன்னும் திருப்தியாக இல்லை. நான் இதுவரை நடித்தவற்றில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால் டைரக்‌ஷனை முயற்சிப்பேன்’என்றார் நித்யா மேனன்.