சினிமா

''இருக்கு ஒரு தரமான சம்பவம்'' - சூர்யா படம் குறித்து அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்.!

''இருக்கு ஒரு தரமான சம்பவம்'' - சூர்யா படம் குறித்து அப்டேட் கொடுத்த பாண்டிராஜ்.!

webteam

கடந்த 2009ம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க படம், தமிழ்ப்பட வரிசையில் சிறந்த படம் மற்றும் திரைக்கதைக்காக தேசிய விருது பெற்றது. கடந்த பத்து ஆண்டுகளில் சூப்பர்ஹிட் படங்களின் மூலம் சிறந்த இயக்குநராக பாண்டிராஜ் உருவாகியிருக்கிறார். கடைசியாக அவர் இயக்கிய சிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தை இயக்கினார்.

அடுத்து சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் பாண்டிராஜ், ''இருக்கு ஒரு தரமான சம்பவம்'' என பதிவிட்டுள்ளார். சூர்யாவின் 40தாவது படத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். சூர்யாவின் சூரரைப்போற்று விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.