சினிமா

‘யார் என்ன சொன்னாலும் அன்பாகவே இருப்போம்’.. உருகிய விக்னேஷ் சிவன்

‘யார் என்ன சொன்னாலும் அன்பாகவே இருப்போம்’.. உருகிய விக்னேஷ் சிவன்

Rasus

இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் சூர்யா கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அத்தோடு மட்டுமில்லாமல் படத்தில் இடம்பெற்றிருந்த ‘ சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடல் பட்டி தொட்டியெங்கும் செம ஹிட் அடித்தது. படத்தின் கதாநாயகி கீர்த்தி சுரேஷ். படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் சூர்யா கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். புத்தம் புதிய சிவப்பு நிற டொயாட்டா காரைப் பரிசாக வழங்கி தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சூர்யா.

இதனால் நெகிழ்ந்துபோன விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ யான் என்ன சொன்னாலும் அன்பாகவே இருப்போம். விலைமதிப்பற்ற அன்பிற்கு நன்றி சார். என்னை போன்ற இளம் இயக்குநர்களை ஊக்குவிக்க ஒரு பெரிய இதயம் வேண்டும். உங்களின் இத்தகைய அளவுக்கடந்த அன்பிற்கு நான் தகுதியானவானா..? என்பது தெரியவில்லை. இத்தகைய வாய்ப்பிற்கும், இந்த நிமிடத்திற்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.