இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ’ரெட்ரோ’. சூர்யா ஜோதிகாவின் 2D Productions, கார்த்திக் சுப்புராஜின் Stone bence நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஒருபக்கம் பயங்கரமான ஹேங்ஸ்டர், மறுபக்கம் அனைத்திலிருந்தும் விடுபட்டு வாழ நினைக்கும் காதல் என படம் லவ்-ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் வரும் மே 1-ம் தேதி திரையில் வெளியாகவிருக்கும் நிலையில், படத்திற்கான புரோமோசன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், கேரளாவில் ரெட்ரோ படத்திற்கான புரோமோசன் நிகழ்ச்சியில் சூர்யா கலந்துகொண்டார்.
அப்போது பேசிய சூர்யா, ”ரெட்ரோ திரைப்படத்தில் தேவைப்பட்டதால் தான் படத்திற்காக சிகரெட் பிடித்தேன். தயவு செய்து யாரும் சிகரெட் பிடிக்கதீர்கள். அந்த பழக்கத்தை ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. ஒரு பஃப் தான் என்று கூட துவங்காதீர்கள். நான் இதை எப்போதும் ஆதரிக்கமாட்டேன்" என்று பேசியுள்ளார்.
சூர்யாவிற்கு கங்குவா திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு ரெட்ரோ கம்பேக் திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் அதிக எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.