சினிமா

ஆஸ்கர் தகுதிப்பட்டியலில் இடம்பிடித்த சூர்யாவின் ‘ஜெய் பீம்’, மோகன்லாலின் ‘மரைக்காயர்’

sharpana

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் சூர்யாவின் சூர்யாவின் ‘ஜெய் பீம்’, மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ உள்ளிட்டப் படங்கள் இடம்பிடித்துள்ளன.

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ’ஜெய் பீம்’ கடந்த நவம்பர் மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. ஏற்கனவே, ’ஜெய் பீம்’ ஐஎம்டிபி இணையதளத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற படங்களில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியப் படமாகாவும் அறிவிக்கப்பட்டது. ஆஸ்கர் யூடியூப் தளத்தில் இடம்பிடித்த முதல் தமிழ் படமாகவும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. பல்வேறு சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டுக்கொண்டு வரும் நிலையில், ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஆஸ்கர் விருது படங்களுக்கான தகுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 276 படங்கள் போட்டியிட்டுள்ள இதன் இறுதிப்பட்டியல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி அறிவிக்கப்படும். 

ஏற்கனவே, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படமும் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ் நடித்த ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படமும் இடம்பிடித்துள்ளது. ஏற்கனவே, இப்படம் மூன்று தேசிய விருதுகளைக் குவித்துள்ளது.வரும் மார்ச் 27 ஆம் தேதி 94 வது ஆஸ்கர் விருது விழா இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் ‘ஜெய் பீம்’, ‘மரைக்காயர்’ படங்கள் இடம்பிடித்துள்ளன.