சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. . ஜூலையில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’, அதன் பிறகு `சூர்யா 47' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.
சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. சூர்யாவின் 46வது படமான இதில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார் என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மார்ச் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. சூர்யா ஒரு குழந்தையுடன் வருமாறு உள்ள போஸ்டர் மூலம் இது ஓர் உணர்ச்சிபூர்வமான குடும்பக் கதையாக இருக்கும் என்ற வகையில் அமைந்திருந்தது. இப்படத்திற்கான இசையை ஜி.வி.பிரகாஷ் குமார் அமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுபெற்ற நிலையில், வருகிற ஜூலை மாதம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகத் தயாராகி வருகிறது. சூர்யாவின் `கருப்பு' மே மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஜூலையில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’, அதன் பிறகு `சூர்யா 47' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.