Diya Suriya Leading Light
சினிமா

அறிமுக இயக்கத்திலேயே ஆஸ்கர் முயற்சி... அசத்தும் சூர்யா - ஜோதிகா மகள் தியா!|Diya Suriya|Leading Light

திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட் உலகில் பணிபுரியும் அப்பெண்களின் அனுபவங்களை விவரிக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமாவாக உருவாகியுள்ளது.

Johnson

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர தம்பதி சூர்யா, ஜோதிகா. தற்போது இவர்களது வாரிசும் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். சூர்யா - ஜோதிகாவின் மகள் தியா சூர்யா. இவர் இயக்கியுள்ள ஒரு படைப்பு பரவலான அங்கீகாரங்களை பெற்றுவருகிறது.தியா சூர்யா பாலிவுட் லைட்வுமன்களை மையமாக கொண்டு உருவாக்கியிருக்கும் டாக்கு-டிராமா குறும்படம் `லீடிங் லைட்' (LeadingLight). திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட் உலகில் பணிபுரியும் அப்பெண்களின் அனுபவங்களை விவரிக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தை 2டி என்டர்டைன்மெண்ட் சார்பில், சூர்யா ஜோதிகா தயாரித்துள்ளனர்.

Diya Suriya

உலகம் முழுக்க பலத்த பாராட்டுக்களை குவித்து வரும் இப்படம் Oscar Qualifying Runக்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் Regency Theatre-இல் திரையிடப்படுகிறது. ஆஸ்கருக்கு அனுப்புவதற்கான தகுதிகளில் ஒன்று இந்த Oscar Qualifying Run. விதிமுறைகளின் படி 7 நாட்கள் இந்த Qualifying Run காட்சிகள் நடத்தப்பட வேண்டும். அதன் படி செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12:00 மணி காட்சியாக, இப்படம் திரையிடப்பட உள்ளது. இதன் மூலம் ஆஸ்கர் நடுவர் குழுவில் உள்ள உறுப்பினர்கள், இப்படத்தை காண்பார்கள். அதன் பின் ஆஸ்கர் நடைமுறைகள் இன்னும் நிறைய உள்ளன. அதன் ஆரம்ப கட்டமாக இந்த திரையிடலை எடுத்துக் கொள்ளலாம்.

அறிமுக இயக்கத்திலேயே, ஆஸ்கர் வரை செல்லும் இத்தகைய பெருமையை பெற்றிருக்கும் இயக்குநர் தியா சூர்யாவுக்கு, பல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.