சினிமா

சதீஷுக்காக ‘நாய் சேகர்’ படத்தில் பாடல் எழுதியுள்ள சிவகார்த்திகேயன்

சதீஷுக்காக ‘நாய் சேகர்’ படத்தில் பாடல் எழுதியுள்ள சிவகார்த்திகேயன்

sharpana

நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘நாய் சேகர்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியுள்ளார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமே அறியப்படும் நடிகர் சதீஷ் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷோர் இயக்கத்தில ’நாய் சேகர்’ படத்தில் நடித்து வருகிறார். ஹீரோயினாக ‘குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா லக்‌ஷ்மி நடிக்கிறார். சமீபத்தின் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியும் தருவாயில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், சதீஷுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ‘நாய் சேகர்’ படத்தில் ஒரு பெப்பி பாடலை எழுதியுள்ளார். இந்தத் தகவலை படக்குழு அதிகாரபூர்வமாக போஸ்டருடன் அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே சிவகார்த்திகேயன், ‘டாக்டர்’ படத்தில் ‘செல்லம்மா’, ‘ஓ பேபி’ பாடலை எழுந்தியிருந்தார். தற்போது, ‘பீஸ்ட்’, ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.